- வீடு›
- பொழுதுபோக்கு›
- விஜய் 68ன் படத்தலைப்பு சிஎஸ்கே? கோலிவுட்டில் உலா வரும் தகவல்
விஜய் 68ன் படத்தலைப்பு சிஎஸ்கே? கோலிவுட்டில் உலா வரும் தகவல்
By: Nagaraj Tue, 06 June 2023 8:05:54 PM
சென்னை: விஜய்யின் 68 - வது பட தலைப்பு குறித்த அப்டேட்ஸ் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிஎஸ்கே என்று படத்தின் தலைப்பு அமையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை கிரிக்கெட் அணியின் தலைப்பு தான் படத்தின் தலைப்பு என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர். விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
விஜய்க்கு 68-வது படமான இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம் பேசி வருவதாக தகவல் வெளியானது.
சமீபத்தில், விஜய்யின் 68 - வது படம் குடும்ப படமாகவும் அப்பா-மகன் உறவுக்கிடையேயுள்ள கருத்து வேறுபாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் விஜய்யின் 68 - வது பட தலைப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, வெங்கட் பிரபு படக்குழுவினரோடு சென்னை கடற்கரை அருகில் இருக்கும் ஓட்டலில் கதை விவாதத்தில் ஈடுபட்ட போது படத்தின் தலைப்பை ' சி.எஸ்.கே ' ( csk ) என்று வைக்கலாம் என்று ஆலோசித்திருக்கிறார்கள்.
இதனை விஜய் அனுமதி பெற்ற பிறகு முறைப்படி அறிவிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.