Advertisement

விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்

By: vaithegi Fri, 10 Feb 2023 08:54:40 AM

விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்

'பிச்சைக்காரன் -2' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது ... இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது.

இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்ற போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து அவர் தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.

vijay antony,a beggar ,விஜய் ஆண்டனி,பிச்சைக்காரன்

இந்நிலையில், 'பிச்சைக்காரன் -2' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. எனவே அதன்படி, இந்த திரைப்படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என புதிய போஸ்டர் வெளியிட்டு விஜய் ஆண்டனி தன்னுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், 'பணம் உலகை காலி பண்ணிடும்' என பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்த பதிவு தற்போது கவனம் ஈர்த்து இணையத்தில் வைரலாகி கொண்டு வருகிறது.

Tags :