- வீடு›
- பொழுதுபோக்கு›
- படப்பிடிப்பின் போது காயமடைந்த விஜய் ஆண்டனி
படப்பிடிப்பின் போது காயமடைந்த விஜய் ஆண்டனி
By: Nagaraj Tue, 17 Jan 2023 10:30:21 PM
சென்னை: .மலேஷியாவின் லங்காவி தீவில் ‘பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பின் போது படகு விபத்தில் சிக்கி நடிகர் விஜய் ஆண்டனி காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நான்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். சசி இயக்கிய பிச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்தார்.
பிச்சைக்காரன் தமிழ் மற்றும் தெலுங்கில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம். விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து வருகிறார்.மலேஷியாவின் லங்காவி தீவில் ‘பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பின் போது படகு விபத்தில் சிக்கி நடிகர் விஜய் ஆண்டனி காயமடைந்தார்.
அவர் சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிச்சைக்காரன் 2 படத்தின் முன்னோட்டம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.