Advertisement

விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை சம்பவம்... திரையுலகத்தினர் அதிர்ச்சி

By: Nagaraj Tue, 19 Sept 2023 7:31:38 PM

விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை சம்பவம்... திரையுலகத்தினர் அதிர்ச்சி

சென்னை; இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் விஜய் ஆண்டனி. இவர் காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா. இவர் பிளஸ் 2 படித்து வந்தார். சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் விஜய் ஆண்டனி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

meera,stress,vijay antony,hospital,postmortem ,
மீரா, மன அழுத்தம், விஜய் ஆண்டனி, மருத்துவமனை, பிரேத பரிசோதனை

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் அறைக்கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் கதவை திறந்து பார்த்த பெற்றோர், மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக மீராவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மீரா உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மீராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மீரா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தது தெரியவந்தது.

Tags :
|
|