Advertisement

விஜய் ஆண்டனியின் பட டீசர் செம வைரலாகிறது

By: Nagaraj Tue, 28 Nov 2023 8:47:36 PM

விஜய் ஆண்டனியின் பட டீசர் செம வைரலாகிறது

சென்னை: எதிர்க்கிறவங்கள அதிகாரம் அழிக்கத்தான் நினைக்கும் என்று கூறும் விஜய் ஆண்டனி பட டீசர் செமத்தியாக வைரலாகி வருகிறது.

வெண்ணிலா கபடிகுழு, பாண்டியநாடு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என கவனிக்க வைத்த பல படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இதைத்தொடர்ந்து, இவர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'வள்ளி மயில்'. இப்படத்தில் பிரியா அப்துல்லா, சத்யராஜ், பாரதிராஜா, தம்பி ராமையா, ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

teaser,crew,release,subtitles,social media,viral ,டீசர், படக்குழு, வெளியீடு, வசனங்கள், சமூக வலைதளம், வைரல்

இந்த படத்தினை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். வள்ளி திருமணத்தை பின்புலமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது.

இந்நிலையில், இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. 'எதிர்க்கிறவங்கள எப்போதும் சிஸ்டமும் அதிகாரமும் அழிக்கத்தான் நினைக்கும்' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
|
|