Advertisement

விஜய் ஆண்டனியின் சொத்து மதிப்பு ரூ.55 கோடியாம்

By: Nagaraj Tue, 25 July 2023 7:29:55 PM

விஜய் ஆண்டனியின் சொத்து மதிப்பு ரூ.55 கோடியாம்

சென்னை: நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் சொத்து மதிப்பு ரூ.55 கோடி என்று தகவல் கோலிவுட்டில் உலா வந்து கொண்டு இருக்கிறது.

தமிழ் சினிமாவில் ஒரு துறையில் நுழையும் பிரபலங்கள் அப்படியே அடுத்தடுத்த துறைகளில் தங்களது திறமைகளை காட்டி வருகிறார். அப்படி விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கியவர் விஜய் ஆண்டனி.

டிஷ்யூம், நான் அவன் இல்லை, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் இசையமைத்து வந்த அவர் காதலில் விழுந்தேன் படத்தின் பாடல்கள் மூலம் பெரிய ரீச் பெற்றார்.

rs 55 crore,vijay antony,net worth,kollywood,luxury cars ,ரூ.55 கோடி, விஜய் ஆண்டனி, சொத்து மதிப்பு, கோலிவுட், சொகுசு கார்கள்

பின் நான் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த அவர் அடுத்தடுத்து சலீம், இந்தியா பாகிஸ்தான், எமன், சைத்தான், பிச்சைக்காரன், பிச்சைக்காரன் 2 என தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார். விஜய் ஆண்டனிக்கு சென்னையில் ரூ. 5 கோடி மதிப்புள்ள ஒரு பங்களாவும், பெங்களூரில் ரூ. 3 கோடியில் ஒரு வீடும் உள்ளது.

அதேபோல் பிஎம்டபில்யூ போன்ற விலையுயர்ந்த சொகுசு கார்களை வைத்துள்ள விஜய் ஆண்டனியின் சொத்து மதிப்பு ரூ. 55 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.

Tags :