- வீடு›
- பொழுதுபோக்கு›
- வாரிசு படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய விஜய்
வாரிசு படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய விஜய்
By: Nagaraj Sun, 22 Jan 2023 6:38:57 PM
சென்னை: கேக் வெட்டி கொண்டாடினர்... 'வாரிசு' படத்தின் மாபெரும் வெற்றியை விஜய் மற்றும் படக்குழுவினர் கேக் கொண்டாடியுள்ளனர்.
இயக்குனர் வம்சி மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. கடந்த 11-ஆம் தேதி வெளியான இப்படம் 2 இரண்டு வாரங்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய்யின் வழக்கமான படமாக இல்லாமல் குடும்ப பின்னணி கொண்டு இப்படம் உருவாகியுள்ளதால் குடும்பம் குடும்பமாய் சென்று படத்தை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.
இந்த படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய்யும், ராஷ்மிகாவும் இணைந்து நடித்துள்ள காதல் காட்சிகள் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தமன் இசையில் உருவாகியுள்ள ரஞ்சிதமே பாடல் ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டுள்ளது.
இந்த படம் வெளியாகி 7 நாளில் 210 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதும் கூட்டம் குறையாமல் படத்தை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்வில் இயக்குனர் வம்சி, இசையமைப்பாளர் தமன் மற்றும் படக்குழுவினர் கலந்துக்கொண்டனர்.