Advertisement

விஜய் பட தயாரிப்பாளர் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சந்திப்பு

By: Nagaraj Sat, 11 June 2022 8:05:18 PM

விஜய் பட தயாரிப்பாளர் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சந்திப்பு

சென்னை: தளபதி 67 படத்தை தயாரிக்கும் லலித்குமார் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சந்தித்துள்ளனர். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தளபதி 66 திரைப்படத்தில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
தளபதி 66 திரைப்படம் முடியும் முன்பே அவரின் தளபதி 67 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் காணப் படுகிறது. ஏன்னென்றால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் விஜய்.

vijay fans,meeting,excitement,director,producer ,விஜய் ரசிகர்கள், சந்திப்பு, உற்சாகம், இயக்குனர், தயாரிப்பாளர்

இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் அப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பல இடங்களில் பேசிவிட்டார்.
இந்நிலையில் தற்போது தளபதி 67 பட கூட்டணியின் சந்திப்பு இன்று நடந்திருக்கிறது. விக்ரம் பட வெற்றியை வாழ்த்த தயாரிப்பாளர்கள் கமல் மற்றும் லோகேஷ் கனகராஜை சந்தித்ள்ளனர். அப்போது தளபதி 67 படத்தை தயாரிக்கும் லலித்குமார் மற்றும் லோகேஷ் கனகராஜ் சந்தித்துள்ளனர். அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படம் தான் தற்போது விஜய் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Tags :