Advertisement

விஜய் ஒரு பெரிய குழந்தை... இயக்குனர் மிஷ்கின் நெகிழ்ச்சி

By: Nagaraj Tue, 04 July 2023 9:34:20 PM

விஜய் ஒரு பெரிய குழந்தை... இயக்குனர் மிஷ்கின் நெகிழ்ச்சி

சென்னை: விஜய் ஒரு பெரிய குழந்தை. 21 வருஷத்துக்கு முன்னாடி நான் விஜய்யோட யூத் படத்துல வேலை செஞ்சேன். அப்போ எப்படி என்கிட்ட பேசினாரோ, இத்தனை வருஷத்துக்கு அப்புறம் அதே அன்போடு தான் பேசுறார் என்று மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் தயாராகிறது. இந்தப் படத்துக்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘மாவீரன்’ திரைப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.

actor,leo,myshkin,singam,vijay, ,சிங்கம், நடிகர், மிஷ்கின், லியோ, விஜய்

இதில் படக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மிஷ்கின் மேடையில் வரும் பொழுது ரசிகர்கள் லியோ லியோ என்று ஆரவாரம் செய்தனர். அப்போது மிஷ்கின் பேசியதாவது, லியோ-னா சிங்கம்.. விஜய் எப்போதுமே சிங்கம் தான்.

விஜய் ஒரு பெரிய குழந்தை. 21 வருஷத்துக்கு முன்னாடி நான் விஜய்யோட யூத் படத்துல வேலை செஞ்சேன். அப்போ எப்படி என்கிட்ட பேசினாரோ, இத்தனை வருஷத்துக்கு அப்புறம் அதே அன்போடு தான் பேசுறார் என்றார். மாவீரன் திரைப்படம் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|
|