Advertisement

இன்ஸ்டாவில் இணைந்த உடனேயே சாதனை படைத்த நடிகர் விஜய்

By: Nagaraj Tue, 04 Apr 2023 08:37:37 AM

இன்ஸ்டாவில் இணைந்த உடனேயே சாதனை படைத்த நடிகர் விஜய்

சென்னை: சாதனை படைத்தார்... தளபதி விஜய் இன்ஸ்டாகிராமில் இணைந்த ஒரு மணி நேரத்திலேயே ஒரு மில்லியன் பின்தொடர்வோரை எட்டி சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தில் மாஸான படங்களைத் தேர்வு செய்து, தனது கிளாஸான நடிப்பை வெளிப்படுத்தி வலம் வருபவர் தான் தளபதி விஜய். இவர் எது செய்தாலும் தனது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பார்க்கப்படும். இவர் தனக்கென மிகப்பெரிய ரசிகர் சாம்ராஜ்யத்தையே வைத்திருக்கிறார் எனலாம்.

இதுவரை ட்விட்டரில் மட்டுமே அவ்வப்போது ஆக்டிவாக இருந்த தளபதி விஜய், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இணைந்து தனது ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் நீந்தச் செய்துள்ளார்.

instagram vijay joined achievement followers fans ,இன்ஸ்டாகிராம், விஜய், இணைந்தார், சாதனை, பின்தொடர்வோர், ரசிகர்கள்

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இவருடைய அஃபிஷியல் கணக்கு தொடங்கப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே 10 லட்சம் ஃபாலோயர்கள் மளமளவென பின் தொடர்ந்து விட்டனர். இது மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. தற்போது வரை இதில் சுமார் 4.3 மில்லியன் நபர்கள் இவருடைய பக்கத்தைப் பின் தொடர்ந்துள்ளனர். நேரம் செல்லச் செல்ல இந்த கணக்கிற்கு வரும் ஃபாலோயர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது.

மேலும் லியோ பட கெட்டப்பில் அவர் பகிர்ந்துள்ள முதல் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த தகவலானது தளபதி விஜய் ரசிகர்களின் வாயிலாக பலவிதப்பட்ட சமூக வலைதளங்களில் #ThalapathyOnINSTAGRAM என்கிற ஹேஷ்டேக் மூலம் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் தளபதி விஜய் இன்ஸ்டாகிராம் லைவில் வரவேண்டும் என அவருடைய ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அடுத்ததாக லியோ திரைப்படம் குறித்த அனைத்து அப்டேட்டுகளையும் இன்ஸ்டாகிராமிலேயே பகிரும்படியும் கேட்டு வருகின்றனர்.

விஜயின் இந்த அஃபிஷியல் இன்ஸ்டாகிராம் கணக்கை சூர்யா, சிம்பு, மஞ்சுமா மோகன், ஹன்சிகா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பல பிரபலங்களும் பின்தொடர்ந்து வருகிறார்கள். விஜய் இன்ஸ்டாகிராமில் இணைந்தது குறித்து பலரும் நேர்மறையான கருத்துக்களைக் கூறி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Tags :