Advertisement

பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு சம்பளம் வாங்கும் நடிகர் விஜய்

By: Nagaraj Thu, 06 Oct 2022 9:10:32 PM

பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு சம்பளம் வாங்கும் நடிகர் விஜய்

சென்னை : வாரிசு படத்தில் நடித்ததற்காக படத்தின் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக அதாவது 120 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் விஜய் என்று தகவல்கள் ெளியாகி உள்ளது.

பீஸ்ட் படத்தை அடுத்து தில் ராஜு தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் வாரிசு. ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஷியாம், பிரகாஷ்ராஜ், குஷ்பு, யோகி பாபு, சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 20-ம் தேதியுடன் நிறைவடைகிறது. வாரிசு அடுத்த ஆண்டு பொங்கல் திருநாள் 2023 அன்று வெளியாகும். வாரிசு படத்திற்கான விஜய்யின் சம்பளம் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது வாரிசின் மொத்த பட்ஜெட் 200 கோடி. கிட்டத்தட்ட 50 கோடி செலவில் இப்படம் உருவாகியுள்ளது. விஜய்யைத் தவிர மற்ற நடிகர், நடிகைகள் 30 கோடி சம்பளம் வாங்கியுள்ளனர். வாரிசு படத்தில் நடித்ததற்காக படத்தின் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக அதாவது 120 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் தளபதி விஜய். தற்போது வாரிசு நிறுவனத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமம் பல கோடிகளுக்கு விற்கப்பட்டுள்ளது.

after beast,rashmika mandhana,shooting,telugu director,vamsi , இயக்கம், பீஸ்ட், வம்சி, வாரிசு, விஜய்

முதல்முறையாக விஜய் படத்திற்கு வாரிசு மூலம் இசையமைக்கிறார் தமன். இந்த படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடித்த யூத் படத்தின் ஆல்தோட்டா பூபதி பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், வாரிசுவின் முதல் சிங்கிள் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக விஜய் ரசிகர்கள் தீபாவளிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். படம் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும்.

Tags :