Advertisement

விஜய் லியோ படத்தை பார்த்து மிகவும் உற்சாகத்தில் இருக்கிறாராம்

By: vaithegi Mon, 09 Oct 2023 1:06:30 PM

விஜய் லியோ படத்தை பார்த்து மிகவும் உற்சாகத்தில் இருக்கிறாராம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து உள்ள லியோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று கொண்டு வருகிறது.

இதனை அடுத்து இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை வைத்து பார்க்கையில் படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இடையில், விஜய் நடிகர் லியோ திரைப்படத்தை பார்த்து மிகவும் உற்சாகத்தில் இருக்கிறாராம்.

vijay,leo,theaters ,விஜய் ,லியோ , திரையரங்குகள்


மேலும் படத்தை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் லோகேஷ் கனகராஜை கட்டிமட்டும் அனைத்தாராம். எனவே, அவர் கட்டி அனைத்ததிலேயே படம் எப்படி வந்து உள்ளது என்பது தெரியவந்துள்ளது. விஜய்யே படத்தை பார்த்து சந்தோசமாக இருக்கிறார் கண்டிப்பாக படம் பிளாக் பஸ்டர் தான் என கூறி வருகிறார்கள்.

ஏற்கனவே , லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் போது அந்த டிரைலரை 3 முறை விஜய் பார்த்ததாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து படத்தையும் விஜய் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளதால் படத்தின் மீது இன்னுமே எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. எனவே, படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Tags :
|
|