- வீடு›
- பொழுதுபோக்கு›
- மற்றொரு தெலுங்கு படத்தில் நடிக்க விஜய் திட்டம்... கோலிவுட் வட்டாரங்கள் தகவல்
மற்றொரு தெலுங்கு படத்தில் நடிக்க விஜய் திட்டம்... கோலிவுட் வட்டாரங்கள் தகவல்
By: Nagaraj Thu, 20 Oct 2022 09:37:26 AM
சென்னை: மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்க முடிவு... வாரிசு படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், மீண்டும் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படம் 2023 பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் விஜய் நடித்துள்ளதால், இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை மைதிரி மூவி மேக்கர் தயாரிக்க உள்ளதாகவும், இயக்குநர் அட்லி இயக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அட்லி தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தை இயக்கி
வருகிறார். நடிகர் விஜய் ’வாரிசு’ படத்தை நிறைவு செய்துள்ளார். இதனை
தொடர்ந்து இரண்டு மாதங்கள் குடும்பத்தினருடன் வெளிநாடு சுற்றுலா செல்ல
உள்ளார். அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க
உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் அல்லது டிசம்பர்
மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து
மற்றொரு தெலுங்கு படத்தில் நடிக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
இத்திரைப்படமும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக உள்ளதாக
கூறப்படுகிறது. தெலுங்கில் தனது மார்க்கெட்டை அதிகப்படுத்தும் நோக்கத்தில்
விஜய் இந்த திட்டத்தை யோசித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பரவலாக
பேசப்பட்டு வருகிறது.