- வீடு›
- பொழுதுபோக்கு›
- ரசிகர்கள் உருவாக்கிய விஜய் போஸ்டர் இணையத்தில் வைரல்
ரசிகர்கள் உருவாக்கிய விஜய் போஸ்டர் இணையத்தில் வைரல்
By: Nagaraj Sun, 25 Oct 2020 1:47:25 PM
விஜய் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளது என்ற தகவல் உலா வரும் நிலையில் அந்த படத்தின் கெட்டப் என்று ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர் இணையத்தை கலக்கி வருகிறது.
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய்.இவரது திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய அளவில் கவனம் பெற்று வருகிறது. அந்த வகையில் சென்ற வருடம் இவரது நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது.
தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து மாஸ்டர் என்கிற திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார். அந்தப் படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் விஜய் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளது என்று ரசிகர்கள் மத்தியில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி வெற்றிமாறன் கூட ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த
படத்திற்கு உண்டான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. குறிப்பாக
வெற்றிமாறன் அசுரன் திரைப்படத்திற்கு அப்புறம் மிகவும் எதிர்பார்க்கும்
இயக்குனராக வலம் வரத் தொடங்கி விட்டார்.
தற்போது அவர் நடிகர்
சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து விஜயுடன் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
எப்பொழுதும் ஒரு புதிய படத்தின் பேச்சுவார்த்தை அடிபட்டால் உடனே ரசிகர்கள்
ஒரு போஸ்டர் உருவாக்கிவிடுவார்கள்.
அதே போன்று தற்போது நடிகர் விஜய்
உடைய ரசிகர்கள் வெற்றிமாறன் படத்தில் விஜய் நடிக்க இருக்கும் கெட்டப்பில்
ஒரு போஸ்டரை உருவாக்கி இணையத்தில் உலாவ விட்டுள்ளனர்.