- வீடு›
- பொழுதுபோக்கு›
- விஜய் – சங்கீதா பழைய படம்... ரசிகர்கள் தொடர்ந்து வைரலாக்குகின்றனர்
விஜய் – சங்கீதா பழைய படம்... ரசிகர்கள் தொடர்ந்து வைரலாக்குகின்றனர்
By: Nagaraj Fri, 23 Dec 2022 11:17:18 PM
சென்னை: இளம் வயதில் விஜய் மற்றும் அவரின் மனைவி சேர்ந்து குடும்ப நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்களுக்கு விஜய் குறித்த எந்த புகைப்படம் கிடைத்தாலும் வைரல்தான் என்பது இதிலும் உறுதியாகி உள்ளது.
குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களால் ரசிக்க படுபவர் நடிகர் விஜய் . இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் 2023-ம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அதன் மீது தான் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களின் மொத்த எதிர்பார்ப்பும் இருக்கிறது.
சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் இரண்டு பாடல்களும் வெளியாகி
மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றது. வாரிசு படத்தின் ப்ரோமோஷன் பணிகள்
தீவிரமாக நடந்து வரும் நிலையில், வாரிசு ஆடியோ லான்ச் 24-ம் தேதி
நடக்கவுள்ளதாக பட குழுவினர் அறிவித்தனர்.
விஜய்
நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் புகைப்படமும் மற்றும் அவரின் சிறுவயது
புகைப் படங்களும் அவ்வப்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகிவிடும். அந்த வகையில்
விஜய் மற்றும் அவரின் மனைவி சேர்ந்து குடும்ப நிகழ்ச்சியில் எடுத்த
புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.