Advertisement

தேசிய விருது இயக்குனருடன் மீண்டும் கூட்டணி அமைத்த விஜய் சேதுபதி

By: Nagaraj Sun, 02 Apr 2023 3:45:40 PM

தேசிய விருது இயக்குனருடன் மீண்டும் கூட்டணி அமைத்த விஜய் சேதுபதி

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி, தேசிய விருது பெற்ற இயக்குநரான M.மணிகண்டன் இயக்கும் புதிய வெப் சீரிஸில் நடிக்க உள்ளார். இது டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப்சீரிஸாக வெளியாகிறது. இந்த வெப்சீரிஸ் குறித்த அப்டேட்டை அறிவித்துள்ளது.

'காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை', 'கடைசி விவசாயி' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் M.மணிகண்டன். இவரது படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், 'காக்கா முட்டை' திரைப்படம் தேசிய விருதையும் தட்டிச்சென்றது.

சமீபத்தில் வெளியான 'கடைசி விவசாயி' திரைப்படமும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றிருந்தது. தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் சேதுபதி, ஹீரோவாக மட்டுமல்லாது, கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல் எதுவாக இருந்தாலும் அதில் நடித்து அப்ளாஸ் வாங்கி விடுவார்.

again,alliance,vijay sethupathi,fans,web series,enthusiasm ,மீண்டும், கூட்டணி, விஜய் சேதுபதி, ரசிகர்கள், வெப் சீரிஸ், உற்சாகம்

இவருக்கென்று தனி ரசிகப்பட்டாளமே உள்ளது. இவர் ஏற்கெனவே, M.மணிகண்டன் இயக்கத்தில் 'ஆண்டவன் கட்டளை', 'கடைசி விவசாயி' இரண்டிலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் இயக்கவிருக்கும் ஒரு வெப் சீரிஸ்-ல் தற்போது விஜய் சேதுபதி நடிப்பதன் மூலம், தமிழில் வெப் சீரிஸில் முதன்முறையாக முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு, எளிமையான முறையில், மதுரை அருகே உசிலம்பட்டியில் பூஜையுடன் துவங்கியது.

ஏற்கெனவே இரண்டுமுறை இருவரும் இணைந்துள்ளதால், மீண்டும் இணைந்த இந்த கூட்டணியால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Tags :
|
|