- வீடு›
- பொழுதுபோக்கு›
- அப்பாவித்தனத்தை சினிமாவுக்கு வந்தபின்னர் இழந்துவிட்டேன்...பிரபல நடிகர் பேட்டி
அப்பாவித்தனத்தை சினிமாவுக்கு வந்தபின்னர் இழந்துவிட்டேன்...பிரபல நடிகர் பேட்டி
By: Monisha Mon, 13 July 2020 10:01:30 AM
'மாஸ்டர்' திரைப்படம் குறித்து விஜய் சேதுபதி தனது சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமாவுக்கு வந்ததால் பெயர், புகழ், பணம் உள்பட பலவற்றை நான் பெற்றிருந்தாலும் ஒன்றை மட்டும் இழந்து விட்டேன் என்று கூறியுள்ளார்
தளபதி விஜய்யுடன் விஜய்சேதுபதி நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் குறித்து பேட்டி அளித்த அவர், 'மாஸ்டர்' திரைப்படம் மிக பிரமாண்டமாக வந்துள்ளதாகவும், இந்த படத்தின் டிரைலரை தான் பார்த்ததாகவும், மிக சிறப்பாக இருந்ததாகவும், ரசிகர்களையும் மக்களையும் இந்த கவர்ந்த படம் கவரும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறினார்
மேலும் இந்த படத்தின் வில்லன் கேரக்டர் தான் ரசித்து செய்ததாகவும் கூறிய விஜய் சேதுபதி என்னை விட பெரிய நடிகரான விஜய் உடன் நடிக்கும் போது எப்படி இருக்குமோ என்று ஆரம்பத்தில் பயந்தேன் என்றும், ஆனால் அவருடன் நடிப்பதில் மிகவும் சௌகரியமாக இருந்தது என்றும் விஜய் சேதுபதி தெரிவித்தார்
மேலும் சினிமாவுக்கு வந்ததால் பெயர் புகழ் செல்வம் உள்ளிட்ட பல விஷயங்களை பெற்றாலும் தன்னுடைய அப்பாவித்தனத்தை சினிமாவுக்கு வந்தபின்னர் இழந்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும் சினிமாவுக்கு வருவதற்கு முன் ஓரளவுக்கு நேர்மையாகவும் நல்லவனாகவும் இருந்தேன் என்றும் விஜய்சேதுபதி கூறியுள்ளார்.