Advertisement

திகில் படத்தில் நடிக்க உள்ளார் விஜய்சேதுபதி

By: Nagaraj Fri, 29 July 2022 2:44:39 PM

திகில் படத்தில் நடிக்க உள்ளார் விஜய்சேதுபதி

சென்னை: திகில் படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி.. எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி திகில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர். ஆனால் மற்ற முன்னணி நடிகர்களைப் போல கமர்ஷியல், மாஸ் என்ற வரையறைக்குள் வராமல் தான் ஆசைப்படும் கதாபாத்திரங்களை அசால்ட்டாக செய்து ஸ்கோர் பண்ணி வருகிறார்.

தமிழில் ஒரே நேரத்தில் அதிக படங்களில் நடிக்கும் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. தற்போது தெலுங்கு, இந்தி என தற்போது பிசியாக நடித்து வருகிறாராம் அவர். இதற்கிடையில் விஜய் சேதுபதி புதிய படங்களுக்காக 5 இயக்குனர்களுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

announcement,pizza movie,horror style,twists,screenplay ,அறிவிப்பு, பீட்சா படம், திகில் பாணி, திருப்பங்கள், திரைக்கதை

அதில் இயக்குனர் எச். வினோத் கூட்டணியில் ஒரு படம். தற்போது வினோத், அஜித் நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தை அடுத்து அவர் விஜய் சேதுபதி உடன் கூட்டணி அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தப் புதிய படம் பீட்சா படம் போல திகில் பாணியில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் படத்தில் பல திருப்பங்கள் இருக்கும் வகையில் சுவாரசியமான திரைக்கதை என்றும் கூறப்படுகிறது. விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|