Advertisement

விஜய்சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்

By: Monisha Wed, 16 Sept 2020 11:36:53 AM

விஜய்சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்

விஜய்சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் திரைப்படத்தை அக்டோபர் 2 முதல் ஓடிடியில் ரசிகர்கள் பார்த்து மகிழலாம் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஐந்து இந்திய மொழிகளிலும் 10 சர்வதேச மொழிகளில் சப்டைட்டிலுடன் இந்த படம் வெளியாகும் என்றும் 150 நாடுகளில் உள்ள ரசிகர்கள் இந்த படத்தை பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த முக்கிய தகவலை தற்போது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.

vijay sethupathi,movie,ott,fans,aishwarya rajesh ,விஜய்சேதுபதி,திரைப்படம்,ஓடிடி,ரசிகர்கள்,ஐஸ்வர்யா ராஜேஷ்

இதில் இந்த படம் ஓடிடியில் மட்டுமின்றி டிடிஎச் தொழில்நுட்பத்திலும் வெளியாகும் என்றும் இந்த படம் அக்டோபர் 2 முதல் ஓடிடி மற்றும் டிடிஎச் ஆகிய இரண்டிலும் ரசிகர்கள் பார்த்து மகிழலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விஜய் சேதுபதி ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை விருமாண்டி இயக்கியுள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|