Advertisement

நிசப்தம் படத்தின் டிரைலரை இன்று வெளியிடும் விஜய்சேதுபதி!

By: Monisha Mon, 21 Sept 2020 10:29:28 AM

நிசப்தம் படத்தின் டிரைலரை இன்று வெளியிடும் விஜய்சேதுபதி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விருமாண்டி இயக்கிய க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், அதே தினத்தில் அனுஷ்காவின் 'நிசப்தம்' திரைப்படமும் மற்றொரு ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஓடிடி தளத்தில் ஒரே நாளில் இரண்டு பிரபலங்களின் படங்கள் ரிலீசாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அனுஷ்காவின் 'நிசப்தம்' படத்தின் டிரைலரை வெளியிட விஜய்சேதுபதி சம்மதம் தெரிவித்துள்ளார்.

anushka,madhavan,vijay sethupathi,trailer,silence ,அனுஷ்கா,மாதவன்,விஜய்சேதுபதி,டிரைலர்,நிசப்தம்

இன்று மதியம் ஒரு மணிக்கு இந்த படத்தின் டிரைலரை அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய படத்திற்கு போட்டியாக வரும் படத்தின் டிரைலரை விஜய் சேதுபதி வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு, உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் அனுஷ்காவுடன் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஹேமந்த் மதுக்கூர் இயக்கியுள்ளார்.

Tags :