Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • மாநகரம் இந்தி ரீமேக்கில் ஸ்பெஷல் கேரக்டரில் நடிக்கும் விஜய்சேதுபதி

மாநகரம் இந்தி ரீமேக்கில் ஸ்பெஷல் கேரக்டரில் நடிக்கும் விஜய்சேதுபதி

By: Nagaraj Fri, 09 Oct 2020 9:38:29 PM

மாநகரம் இந்தி ரீமேக்கில் ஸ்பெஷல் கேரக்டரில் நடிக்கும் விஜய்சேதுபதி

மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கி வெற்றிகண்ட மாநகரம் படத்தை, பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து கோலிவுட் வட்டாரங்கள் கூறுகையில், "வியாழக்கிழமையன்று புதிய படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட விஜய் சேதுபதி. மாநகரம் படத்தில் இருந்த முக்கிய கதாபாத்திரத்தை அவர் ஏற்கிறார். அத்துடன் சொந்தக் குரலிலும் பேசவுள்ளார்.

managaram,vijay sethupathi,hindi remake,vikrant mashe,film ,மாநகரம், விஜய்சேதுபதி, இந்தி ரீமேக், விக்ராந்த் மாஷே, படம்

பழம்பெரும் நடிகர் சஞ்சய் மிஸ்ராவும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சந்தீப் கிஷன் கதாபாத்திரத்தில் விக்ராந்த் மாஷே நடிப்பார். மாநகரம் படத்தின் பிரதான கதையை எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் டீடெய்ல் செய்திருக்கிறார்கள்" என்கிறார்கள்.

மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் மாநகரத்தின் ரீமேக்கில் பாலிவுட்டுக்கு ஏற்ப சில மாற்றங்களை மட்டும் செய்யவுள்ளார்கள். ஊரடங்கு காலத்தில் முடிவு செய்யப்பட்ட இந்தப் படத்தை 2021 ஜூன் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Tags :