Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட விஜய் சேதுபதியின் மாமனிதன் படம் தேர்வு

அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட விஜய் சேதுபதியின் மாமனிதன் படம் தேர்வு

By: Nagaraj Mon, 03 Oct 2022 4:41:15 PM

அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட விஜய் சேதுபதியின் மாமனிதன் படம் தேர்வு

நியூயார்க்: அமெரிக்காவின் முக்கிய திரைப்பட விழாக்களில் ஒன்றாக கருதப்படும் அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் முதல் 5 படங்களில் ஒன்றாக விஜய் சேதுபதியின் மாமனிதன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 20 – விருது அறிவிப்பு என தகவல் தெரிகிறது மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்தார். இப்படத்தை சீனுராமசாமி இயக்கியிருந்தார். தற்போது இதை பற்றி இயக்குனர் சீனுராமசாமி கூறும்போது, ​​”25வது ஆண்டாக அர்பா சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது.

​​25வது ஆண்டு,awards,gayathri,mamanithan,tamil nadu,vijay sethupathi, ,அர்பா, சீனுராமசாமி, விஜய் சேது, விருது

வெள்ளிவிழா ஆண்டில் நடக்கும் இந்த பிரசித்தி பெற்ற விழாவில் விஜய் சேதுபதி நடிப்பில் நான் இயக்கிய மாமனிதன் திரைப்படம் திரையிட தேர்வாகியிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.. தேர்வுக் குழுவிற்கு நன்றி என்றார்.

மாமனிதன் ஏற்கனவே டோக்கியோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த ஆசிய திரைப்படத்திற்கான தங்கப்பதக்க விருதையும், பூடான் சர்வதேச திரைப்பட விழாவில் 4 விருதுகளையும், சிங்கப்பூர் திரைப்பட விழாவில் 4 விருதுகளையும் பெற்றுள்ளது என்றார். மாமனிதன் சர்வதேச அளவில் விருதுகளை குவித்து வருவது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றார்.

Tags :
|