Advertisement

விஜய் படத்தை இயக்க வேண்டும்... ரசிகர்கள் எதிர்பார்ப்பு

By: Nagaraj Sun, 05 June 2022 10:02:50 PM

விஜய் படத்தை இயக்க வேண்டும்... ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சென்னை; இணையத்தை தெறிக்க விடுகின்றனர் ரசிகர்கள்... கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்காக மாறி உள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். சமூக வலைதளங்கள் முழுவதும் லோகேஷ் கனகராஜ் படம் குறித்த பதிவுகள்தான்.

விக்ரம் 1986, கைதி, விக்ரம் 2022, கைதி 2, விஜய் 67 என அனைத்து கதைக்களத்தையும் ஒருங்கிணைத்து லோகி யூனிவெர்ஸ் என அழைத்து அதன் லிங்க் லீடையும் குறிப்பிட்டு ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை ஆவலுடன் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய்யின் 67வது படத்தையும் லோகேஷ் கனகராஜ்தான் இயக்கவிருக்கிறார். இது தொடர்பாக சமீபத்தில் அவரது பெற்றோர் ஒரு பேட்டியில் அளித்திருந்த பதில்தான் விஜய் மற்றும் லோகி ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

wait,vijay fans,lokesh,internet,splash ,காத்திருப்பு, விஜய் ரசிகர்கள், லோகேஷ், இணையம், தெறிக்கிறது

அதில், எனக்கு ஒரு அண்ணன் இருக்காரு அது விஜய்தான் என எப்போதும் சொல்வார் என லோகேஷின் பெற்றோர் கூறியிருக்கிறார்கள். அப்போது விஜய் 67 குறித்து கேட்ட போது, “பண்றேனு சொல்லியிருக்காங்க. வொர்க்லாம் போயிட்டு இருக்கு. ” லோகேஷின் தாயார் கூறியிருக்கிறார்.

இந்த வீடியோவை பகிர்ந்து விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருவதோடு, லோகி யூனிவர்ஸில் விஜய் 67ம் வர வேண்டும் என ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

Tags :
|
|