Advertisement

விஜய் நடித்து உள்ள லியோ இசைவெளியீட்டு விழா செப்டம்பரில் வெளியீடு

By: vaithegi Thu, 20 July 2023 12:21:47 PM

விஜய் நடித்து உள்ள  லியோ இசைவெளியீட்டு விழா செப்டம்பரில் வெளியீடு

வருகிற செப்டம்பர் மாதத்தில் லியோ இசைவெளியீட்டு விழா நடைபெறும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து உ ள்ளார். டிரைலரும் அதே தேதியில் வெளியாகவே அதிக வாய்ப்பு உள்ளது .

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து உள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

leo,vijay ,லியோ ,விஜய்

இதையடுத்து அனிருத் இசையமைத்து உள்ள இந்த படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' விஜய் குரலில் வெளியாகி சமூக வலைதளங்களில் இன்றளவும் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த லோகேஷ் கனகராஜ், வருகிற செப்டம்பர் மாதத்தில் லியோ இசைவெளியீட்டு விழா நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags :
|