Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அசுரன் படத்தில் வந்த வசனத்தை பேசிய விஜய்: இயக்குனர் வெற்றிமாறன் கருத்து

அசுரன் படத்தில் வந்த வசனத்தை பேசிய விஜய்: இயக்குனர் வெற்றிமாறன் கருத்து

By: Nagaraj Mon, 19 June 2023 09:45:10 AM

அசுரன் படத்தில் வந்த வசனத்தை பேசிய விஜய்: இயக்குனர் வெற்றிமாறன் கருத்து

சென்னை: சினிமாவில் நாம் சொல்கின்ற ஒரு விஷயம், சமூகத்துல மிக முக்கியமான ஒரு நபரிடம் போய் சென்றடையும் பொழுது அதனுடைய தாக்கம் என்னவாக இருக்கும் என்பதற்கான ஒரு மிக பெரிய உதாரணம் தான் இது என்று விஜய் பேசியதற்கு இயக்குனர் வெற்றிமாறன் பதில் அளித்துள்ளார்.

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் விஜய் பேசியது பலரின் கவனத்தை ஈர்த்தது. அதில், சமீபத்தில் ஒரு படத்தில் ஒரு அழகான வசனம் நான் கேட்டேன். கார்டு இருந்தால் எடுத்துகிடுவானுங்க, ரூபா இருந்தா பிடுங்கிடுவானுங்க, ஆனா படிப்பை மட்டும் உன்னிடம் இருந்து எடுத்துக்கொள்ளவே முடியாது என்று வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசூரன் பட வசனத்தை விஜய் பேசியிருந்தார்.

vetimaaran,asuran film,vaanam,vijay,example ,வெற்றிமாறன், அசுரன் படம், வசனம், விஜய், உதாரணம்

இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறனிடம், அசூரன் படத்தில் இடம்பெற்ற வசனத்தை நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் பேசியிருந்தார், இதனை எவ்வளவு முக்கியமானதாக நீங்கள் பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது?

இதற்கு வெற்றிமாறன் அளித்த பதில், ஒரு சினிமாவில் நாம் சொல்கின்ற ஒரு விஷயம், சமூகத்துல மிக முக்கியமான ஒரு நபரிடம் போய் சென்றடையும் பொழுது அதனுடைய தாக்கம் என்னவாக இருக்கும் என்பதற்கான ஒரு மிக பெரிய உதாரணம் தான் இது என்றார்.

Tags :
|
|