Advertisement

விஜயகாந்த் பிறந்தநாள் .. ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவிப்பு

By: vaithegi Fri, 25 Aug 2023 12:23:28 PM

விஜயகாந்த் பிறந்தநாள்   .. ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவிப்பு

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் 71 -வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதுடன், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்படுகின்றன.

தேமுதிக தொண்டர்களால் வறுமை ஒழிப்பு தினமாக விஜயகாந்தின் பிறந்தநாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கட்சி தொண்டர்களையும் ,நிர்வாகிகளையும் விஜயகாந்த் இன்று காலை 10 மணிக்கு தேமுதிக தலைமை கழகத்தில் சந்திக்கிறார்.

vijayakanth,o. panneerselvam,birthday ,விஜயகாந்த் ,ஓ.பன்னீர்செல்வம்,பிறந்தநாள்

இதை அடுத்து இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று பிறந்தநாள் விழா காணும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர் அன்புச் சகோதரர் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

அவர் நல்ல தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ்ந்து, தொடர்ந்து நாட்டிற்கு நற்பணியாற்றிட எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :