Advertisement

ஜூடோ ரத்தினத்தின் மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்

By: vaithegi Fri, 27 Jan 2023 10:02:39 AM

ஜூடோ ரத்தினத்தின் மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்


சென்னை:தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இரங்கல் தெரிவிப்பு .... பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும் நடிகருமான ஜூடோ ரத்தினம் வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 93. 1966ம் ஆண்டு நடிகர் ஜெய்சங்கர் நடித்த ‘வல்லவன் ஒருவன்‘ திரைப்படத்தின் மூலம் சண்டை பயிற்சி மாஸ்டராக அறிமுகமானவர் ஜூடோ ரத்தினம். இவர் தமிழ்,தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,500 க்கும் மேற்பட்ட படங்களில் இவர் பணியாற்றியுள்ளார்.

ஏராளமான திரைப்படங்களுக்கு சண்டை பயிற்சி அமைத்து கடந்த 2013ஆம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற இவர் கலைமாமணி மற்றும் சங்கரதாஸ் சுவாமிகள் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். ஜூடோ ரத்தினத்தின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

vijayakanth,judo ratnam,obituary ,விஜயகாந்த் , ஜூடோ ரத்தினம் ,இரங்கல்

இந்த நிலையில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த், பழம்பெரும் ஸ்டண்ட் இயக்குநர் ஜூடோ ரத்தினம், சில வாரங்களாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலமானார் என்ற செய்தி கேட்டு, மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன்.

தமிழ், தெலுங்கு, இந்தி மட்டுமின்றி, 9 மொழிகளில் 1200 படங்களில் ஸ்டண்ட் கலைஞராகவும்,ஸ்டண்ட் இயக்குநராகவும், தர்ம தேவதை, ஈட்டி உள்ளிட்ட நான் நடித்த படங்களுக்கும் பணியாற்றிய பெருமைக்குரியவர் திரு. ஜூடோ ரத்தினம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :