Advertisement

விஜயகாந்தின் உடல் மெலிந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வேதனை

By: Nagaraj Fri, 16 Dec 2022 10:40:41 PM

விஜயகாந்தின் உடல் மெலிந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வேதனை

சென்னை: இது விஜயகாந்தா என்று அவரது ரசிகர்கள் வேதனைப்படுகின்றனர். அந்தளவிற்கு உடல் இளைத்து காணப்படுகிறார் அவர்.

தமிழ் சினிமாவில் உள்ள சில நடிகர்களுக்கு மக்கள் மனதில் தனி இடம் இருக்கும். அப்படிபட்ட ஒரு நடிகர் தான் விஜயகாந்த். கருப்பு நிறம், கலையான முகம், தேசியப்பற்று, புள்ளி விவரத்தை கச்சிதமாக கூறும் நாயகன்.

சினிமாவில் படங்கள் நடித்து எப்படி மக்கள் மனதை கவர்ந்தாரோ அப்படியே அரசியலிலும் ஈடுபட்டு நன்றாக வந்தார். ஆனால் இடையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக அப்படியே வீட்டில் முடங்கினார்.

vijayakanth,old photo,thin body,fans ,விஜயகாந்த், பழைய புகைப்படம், உடல் மெலிந்து, ரசிகர்கள்

மக்களுக்காக எப்போதும் குரல் கொடுத்து பேசும் விஜயகாந்த் இப்போதெல்லாம் மக்களை சந்திப்பது இல்லை, காரணம் அவரது உடல்நிலை. கடைசியாக சில மாதங்களுக்கு முன் வெளிவந்த விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தனது பிறந்தநாளை குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது விஜயகாந்துடன் எடுத்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் கேப்டனா இது, இப்படி உடல் எடை குறைந்து காணப்படுகிறாரே என வருத்தப்பட்டு வருகிறார்கள்.

Tags :