Advertisement

ஜப்பானில் விஜய்யின் மாஸ்டர் படம்... ரசிகர்கள் உற்சாகம்

By: Nagaraj Mon, 31 Oct 2022 10:49:33 PM

ஜப்பானில் விஜய்யின் மாஸ்டர் படம்... ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: விஜய்யின் மாஸ்டர் படம் விரைவில் ஜப்பானில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் செம உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. உலகத்தில் தமிழர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் அவரது படங்களுக்கு பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

rajinikanth,vijay,master film,japan,fans,enthusiasm ,ரஜினிகாந்த், விஜய், மாஸ்டர் படம், ஜப்பான், ரசிகர்கள், உற்சாகம்

மேலும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் ஆகி வெளியாகும்போதும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் விரைவில் ஜப்பானில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முத்து படத்திற்கு பிறகு பெரும்பாலும் ரஜினிகாந்த் படங்கள் அனைத்தும் அங்கே ரிலீஸ் ஆகி வருகிறது. தற்போது விஜய்யும் அங்கே களமிறங்கி இருக்கிறார். சமீபத்தில் ராஜமௌலியின் RRR படம் ஜப்பானில் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|