Advertisement

சிவகாசி படத்தில் நடிக்க விஜய் பெற்ற சம்பளம் ரூ.3 கோடியாம்

By: Nagaraj Fri, 14 Apr 2023 7:44:05 PM

சிவகாசி படத்தில் நடிக்க விஜய் பெற்ற சம்பளம் ரூ.3 கோடியாம்

சென்னை: சிவகாசி படத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.3 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சிவகாசி. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், அசின், எம்.எஸ். பாஸ்கர், கீதா மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

salary,actor vijay,information,rs.3 crore,nayanthara,fans ,சம்பளம், நடிகர் விஜய், தகவல், ரூ.3 கோடி, நயன்தாரா, ரசிகர்கள்

மேலும் ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே விஜய்யுடன் இணைந்து நடிகை நயன்தாரா நடனமாடி இருப்பார். மாபெரும் வெற்றியடைந்த இப்படம் இன்று வரை விஜய் ரசிகர்களால் மறக்கமுடியாத ஒன்றாக இருக்கிறது.

இப்படத்திற்காக நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிக்க தளபதி விஜய் ரூ.3 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளார் என தெரிவிக்கின்றனர்.

Tags :
|