Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • விக்ரமுக்கு லேசான நெஞ்சுவலி மட்டுமே மாரடைப்பு இல்லை - மகன் துருவ் விளக்கம்.

விக்ரமுக்கு லேசான நெஞ்சுவலி மட்டுமே மாரடைப்பு இல்லை - மகன் துருவ் விளக்கம்.

By: Monisha Fri, 08 July 2022 8:02:02 PM

விக்ரமுக்கு லேசான நெஞ்சுவலி மட்டுமே மாரடைப்பு இல்லை - மகன் துருவ் விளக்கம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம்.நேற்று மாலை அவர் வீட்டில் இருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதைத்தொடர்ந்து உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இந்த தகவலை அவரது மகனும், நடிகருமான துருவ் விக்ரம் மறுத்துள்ளார். தனது தந்தைக்கு லேசான நெஞ்சுவலி மட்டுமே ஏற்பட்டதாகவும், மாரட்டைப்பு ஏதும் இல்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் விக்ரம் நலமுடன் இருப்பதாகவும் அவர் ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் எனவும் துருவ் தெரிவித்துள்ளார்.

vikram,son,chest pain,pray , நடிகர், விக்ரம்,மாரடைப்பு,நெஞ்சுவலி,

இந்த சூழ்நிலையில் தங்கள் குடும்பத்தின் தனி உரிமை காக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், தனது தந்தையின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்கள் மன வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார். எனவே விக்ரம் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவதை தவிர்க்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விக்ரம் விரைவில் உடல்நலம் பெற்று வர வேண்டும் என அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.

Tags :
|
|