Advertisement

விக்ரம் - ஹரி கூட்டணியில் புதிய படம் உருவாக உள்ளதாக தகவல்

By: Nagaraj Tue, 01 Dec 2020 12:59:33 PM

விக்ரம் - ஹரி கூட்டணியில் புதிய படம் உருவாக உள்ளதாக தகவல்

நடிகர் விக்ரம் - இயக்குனர் ஹரி கூட்டணியில் அடுத்த படம் தொடங்கப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் அடிக்கடி பல மாற்றங்கள் நடக்கும். இந்த இயக்குனரும், அந்த நடிகரும் கூட்டணி அமைக்க உள்ளார் என்பார்கள், ஆனால் அது நடக்காமலே போய்விடும். இயக்குனர் ஹரி, நடிகர் சூர்யா ஆறாவது முறையாக இணையும் படமாக 'அருவா' உருவாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி வெளியிடப்பட்டது.

அதற்கடுத்து கொரானோ தாக்கத்தால் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை.

actor vikram,director hari,coalition,surya ,நடிகர் விக்ரம், இயக்குனர் ஹரி, கூட்டணி, சூர்யா

ஆனால், 'அருவா' படம் நடக்காது என்ற தகவல்கள் அடுத்த சில மாதங்களில் பரவின. அதற்கேற்றால் போல் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் 'வாடிவாசல்', பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் என சூர்யா தரப்பில் அறிவிக்கப்பட்டது.

'அருவா' படம் ஏறக்குறைய கைவிடப்பட்டுவிட்டது என்றே கோலிவுட்டில் சொல்கிறார்கள். இந்த சூழலில் ஹரிக்குக் கை கொடுக்க விக்ரம் முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'சாமி' படத்தின் வெற்றிக்குப் பிறகு அருள் படம், அதன் பின்பு மீண்டும் 'சாமி ஸ்கொயர்' படத்தில் இணைந்த ஹரி, விக்ரம் கூட்டணி, திரும்பவும் இணைய உள்ளதாக ஒரு தகவல். விரைவில் இதற்கான அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.

Tags :