Advertisement

உலகம் முழுவதும் 10 நாளில் ரூ.300 வசூல் வேட்டை நடத்திய விக்ரம்

By: Nagaraj Mon, 13 June 2022 5:02:49 PM

உலகம் முழுவதும் 10 நாளில் ரூ.300 வசூல் வேட்டை நடத்திய விக்ரம்

சென்னை: உலகம் முழுவதும் 10 நாள் முடிவில் கமல் நடித்த ரூ. 300 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் கமல்ஹாசன் இடையில் சில முக்கிய வேலைகளால் படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார். அது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது, அவர் படங்கள் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் ஆசை.
தற்போது அது நடந்துள்ளது, அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படம் தயாராகி வெளியாகியுள்ளது.

vikram,10 days,worldwide,collection hunt,kamal ,
விக்ரம், 10 நாட்கள், உலகம் முழுவதும், வசூல் வேட்டை, கமல்

படம் கடந்த ஜுன் 3ம் தேதி படு பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது, முதல் நாளில் இருந்து வசூலுக்கு எந்த குறையுமே இல்லை. தற்போது படம் உலகம் முழுவதும் 10 நாள் முடிவில் ரூ. 300 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாம்.
இந்த வருடம் வெளியான தமிழ படங்களில் இப்படம் மாபெரும் வசூல் சாதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|