Advertisement

சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடிக்க விக்ரமிடம் பேச்சுவார்த்தை

By: Nagaraj Thu, 18 May 2023 11:04:46 PM

சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடிக்க விக்ரமிடம் பேச்சுவார்த்தை

சென்னை: விக்ரமிடம் பேச்சுவார்த்தை... நடிகர் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர், லால் சலாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பின் ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

gnanavel,rajinikanth,vikram. negotiation,villain ,ஞானவேல், ரஜினிகாந்த், விக்ரம். பேச்சுவார்த்தை, வில்லன்

அப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க வைக்க நடிகர் விக்ரமிடம் படத்தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் த.செ.ஞானவேல் சொன்ன கதை விக்ரமுக்கு பிடித்திருந்தாலும் வில்லனாக நடிக்க அவர் தயக்கம் காட்டியதால் ரூ.50 கோடி வரை சம்பளம் கொடுக்கவும் தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளதாக தகவல்.

Tags :