Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • தனக்கான நேரம் வரும் வரை காத்திருந்த விக்ரம்... இயக்குனர் பாக்யராஜ் புகழாரம்

தனக்கான நேரம் வரும் வரை காத்திருந்த விக்ரம்... இயக்குனர் பாக்யராஜ் புகழாரம்

By: Nagaraj Fri, 28 Oct 2022 06:42:06 AM

தனக்கான நேரம் வரும் வரை காத்திருந்த விக்ரம்... இயக்குனர் பாக்யராஜ் புகழாரம்

சென்னை: நேரம் வரும் வரை காத்திருந்தார்... விக்ரம் எத்தனை படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் அவருக்கான நேரம் வரும் வரை காத்திருந்தார் என்று இயக்குநர் கே.பாக்யராஜ் புகழாரம் சூட்டினார்.


பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் - பிரைடே பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், இயக்குநர் சிவா மாதவ் இயக்கத்தில், இயக்குநரும், நடிகருமான கே பாக்யராஜ் நடிக்கும் புதிய படம் 3.6.9. இப்படம் 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ள உலக சாதனை படம். இதன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

நடிகர்கள் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், பிளாக் பாண்டி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, இசையமைப்பாளர் தீனா, இயக்குநர் சுப்பிரமணியன் சிவா, நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

toil,vikram,till the time comes,science,praise ,உழைப்பு, விக்ரம், நேரம் வரும்வரை, விஞ்ஞானம், புகழாரம்

விழாவில் பேசிய நடிகர் கே.பாக்யராஜ், 'இந்த படத்துக்காக உழைப்பை விட, இவர்களிடம் இருக்கும் ஒற்றுமை தான் பெரியது. இந்த நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் தான் ஹீரோ போல இருக்கிறார். சில நல்ல விஷயங்களில் நான் பிடிவாதமாக தான் இருப்பேன். என் மனதில் இந்த கிளைமாக்ஸ் நன்றாக வரவேண்டும் என்று நினைத்து நான் பிடிவாதம் பிடித்தேன். அது சரியாகவும் இருந்தது.

பாண்டியராஜன் சொன்னது போல எனக்கு 180 டிகிரி பற்றியெல்லாம் தெரியாது. சினிமாவில் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு தான் வர வேண்டும் என்றால் யாராலும் முடியாது. அதற்கு ஆயுளும் பத்தாது. மனிதன் என்னவெல்லாம் கற்பனை செய்கிறானோ அது ஒரு நாள் விஞ்ஞானமாக வரும் என்பது தான் எல்லோரும் ஒத்துக் கொண்ட சமாச்சாரம்.

நடிகர் விக்ரம் எத்தனை படங்களில் ஹீரோவாக நடித்தாலும், அவருக்கான நேரம் வரும் வரை காத்திருந்தார். சரியான நேரம் வரும் போது தான் எல்லாம் சரியாக அமைந்தது. அது வரை தனக்கான உழைப்பை விக்ரம் கொடுத்து கொண்டே இருந்தார். அது போல உங்கள் உழைப்பை நிச்சயமாக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்'. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|
|