Advertisement

விக்ரமின் துருவ நட்சத்திரத்தின் 2வது பாடலின் ப்ரோமோ வெளியானது

By: Nagaraj Tue, 18 July 2023 11:44:19 PM

விக்ரமின் துருவ நட்சத்திரத்தின் 2வது பாடலின் ப்ரோமோ வெளியானது

சென்னை: துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாவது பாடலின் புரோமோ வீடியோ வெளியானது.

விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். இந்த படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார். ரிதுவர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

dhruva nakshatra,movie,promo,second song,video ,இரண்டாவது பாடல், துருவ நட்சத்திரம், படம், புரோமோ, வீடியோ

இப்படத்தின் வேலைகள் 2017 ஆம் ஆண்டிலேயே தொடங்கியது. முக்கிய காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டன. இப்படம் 2018ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது, ஆனால் சில காரணங்களால் படம் தாமதமானது.

சமீபத்தில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், ‘ஜான் விரைவில் உங்களை சந்திப்பார்’ என்றும் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்’ படத்தின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலின் முழு லிரிக் வீடியோ வரும் 19ம் தேதி வெளியாகிறது.

Tags :
|
|