Advertisement

விடுதலை திரைப்படம் உலகம் முழுவதும் 35 கோடி வசூல்

By: vaithegi Thu, 06 Apr 2023 3:18:04 PM

விடுதலை திரைப்படம் உலகம் முழுவதும் 35 கோடி வசூல்

நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச்சில் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் கெளதம் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இதையடுத்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படத்தை பார்த்த அனைவரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

collection,release ,வசூல் ,விடுதலை

மேலும் படம் வெளியாகி 5 நாட்களை கடந்தும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. இந்நிலையில் படம் தற்போது வரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, இத்திரைப்படம் உலகம் முழுவதும் 35 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. எனவே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் இனி வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும். மேலும் செப்டம்பர் மாதம் விடுதலை திரைப்படத்தின் 2-வது பாகம் வெளியாகவுள்ளது.

Tags :