- வீடு›
- பொழுதுபோக்கு›
- அனுஷ்கா சர்மாவை விராட் கோலி விவாகரத்து செய்ய வேண்டும் - பாஜக எம்எல்ஏ பேட்டி
அனுஷ்கா சர்மாவை விராட் கோலி விவாகரத்து செய்ய வேண்டும் - பாஜக எம்எல்ஏ பேட்டி
By: Monisha Fri, 29 May 2020 3:35:11 PM
பாலிவுட்ன் முன்னணி நடிகையும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா சமீபத்தில் தயாரிப்பாளராக மாறி உள்ளார். அவரது நிறுவனத்தின் தயாரிப்பில் ஏற்கனவே வெளியான ’பாரி’ என்.எச்.18 ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் தற்போது அவர் தயாரித்து வரும் வெப்சீரியல் ’பாதல் லோக்’. இந்த வெப்சீரிஸ் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வந்தது. ஆனால் தற்போது சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெப் சீரியல் தங்கள் இன மக்களை அவமதிப்பு செய்ததாக அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இனத்தவர்கள் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து அனுஷ்கா ஷர்மா மீது விசாரணை நடந்து வருகிறது
இந்த நிலையிலும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ நந்த கிஷோர் என்பவர் தன்னுடைய புகைப்படத்தை அனுஷ்கா சர்மா இந்த வெப் தொடரில் அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் தனது பேட்டியில் ஒன்றில், விராட் கோலி ஒரு தேசபக்தர் என்றும் அவர் நாட்டிற்காக விளையாடும் வீரர் என்றும், அவர் அனுஷ்கா சர்மாவை விவாகரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய புகைப்படத்தை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக அனுஷ்கா மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுப்பது சரிதான், ஆனால் அதற்காக அனுஷ்கா சர்மாவின் குடும்ப விவகாரத்தில் தலையிடுவது சரியா? என்று நெட்டிசன்கள் பாஜக எம்எல்ஏவுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.