Advertisement

லால் சலாம் படத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள விஷ்ணு விஷால்

By: Nagaraj Sun, 06 Aug 2023 7:20:22 PM

லால் சலாம் படத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள விஷ்ணு விஷால்

சென்னை: கேக் வெட்டி கொண்டாடினார்... லால் சலாம் படத்தில், தான் இடம்பெறும் காட்சிகளுக்கான படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கும் விஷ்ணு விஷால், அதனை தனது மனைவியுடன் கேக் வெட்டி படப்பிடிப்பு தளத்திலேயே கொண்டாடி இருக்கிறார்.

லால் சலாம் படிப்பிடிப்பில் தனது பங்கு நிறைவு பெற்றதாகவும், என்ன ஒரு சிறந்த அனுபவப் பயணம்.. உணர்வுப்பூர்வமானதாக அமைந்திருந்ததாகவும் விஷ்ணு விஷால் பதிவிட்டு, புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

லால் சலாம் படத்தின் முதல்கட்ட படிப்பிடிப்பு ஏற்கனவே மும்பை, திருவண்ணாமலை, புதுச்சேரி என பல இடங்களில் நடந்து முடிந்துள்ளது. கிட்டத்தட்ட படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதாகவே கூறப்படுகிறது.

vishnu vishal announced shooting,scenes,rajini scenes ,விஷ்ணு விஷால், படப்பிடிப்பு, காட்சிகள், ரஜினி காட்சிகள், அறிவித்துள்ளார்

இதில், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினியின் காட்சிகள் 20 நிமிடங்கள் வரை இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜூலை மாதம் அறிவித்திருந்தார்.

தற்போது விஷ்ணு விஷாலும் தான் இடம்பெறும் படப்பிடிப்புக் காட்சிகள் நிறைவு பெற்றுவிட்டதாக அறிவித்துள்ளார். விரைவில் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|