Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • 'வாரிசு' திரைப்படத்தின் 3-வது பாடல் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்தது

'வாரிசு' திரைப்படத்தின் 3-வது பாடல் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்தது

By: vaithegi Thu, 22 Dec 2022 09:48:58 AM

'வாரிசு' திரைப்படத்தின் 3-வது பாடல் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்தது

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து கொண்டு வருகிறார்.

மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

successor,movie,song ,வாரிசு,திரைப்படம்,பாடல்

இந்த படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது. வாரிசு திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு மிக தீவிரமாக ஈடுப்பட்டு கொண்டு வருகிறது.

இதனை அடுத்து வாரிசு படத்தின் 3-வது பாடலான சோல் ஆஃப் வாரிசு என்ற பாடல் தற்போது வெளியாகி ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Tags :
|