Advertisement

வாரிசு படத்தின் 3வது பாடல் நாளை வெளியீடு... படக்குழு அறிவிப்பு

By: Nagaraj Mon, 19 Dec 2022 10:03:33 PM

வாரிசு படத்தின் 3வது பாடல் நாளை வெளியீடு... படக்குழு அறிவிப்பு

சென்னை: வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

actor vijay,song,vaarisu, ,நடிகர் விஜய், பாடல், வாரிசு, தலைப்பு, சித்ரா

குடும்பக் கதையை மையமாகக் கொண்ட இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் ‘வாரிசு’ படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே’ பாடலின் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் பாடலை நடிகர் விஜய்யுடன் இணைந்து பாடியவர் எம்.மானசி. இதையடுத்து, படத்தின் இரண்டாவது பாடல் ‘தீ தளபதி’ வெளியிடப்பட்டது. அதை பாடியவர் நடிகர் சிலம்பரசன். இந்நிலையில் வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘இட்ஸ் பார் யூ அம்மா’ மற்றும் ‘சோல் ஆஃப் ஹீயர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த பாடலை விவேக் எழுதி, கே.எஸ்.சித்ரா பாடியுள்ளார்.

Tags :
|