Advertisement

வாரிசு படத்தின் 3-வது பாடல் வெளியானது

By: vaithegi Tue, 20 Dec 2022 6:11:00 PM

வாரிசு படத்தின் 3-வது பாடல் வெளியானது

'இட்ஸ் பார் யூ அம்மா' பாடல் வெளியானது ... தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வாரிசு'. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இதனை அடுத்து இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

குடும்பக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. அண்மையில் 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

song,successor ,பாடல் ,வாரிசு

இந்தப் பாடலை நடிகர் விஜய்யுடன் இணைந்து எம்.எம்.மானசி பாடினார். இதையடுத்து படத்தின் 2-வது பாடலான 'தீ தளபதி' பாடல் வெளியானது.

இதையடுத்து இந்த நிலையில், தற்போது வாரிசு படத்தின் 3-வது பாடல் இன்று வெளியாகியுள்ளது . 'இட்ஸ் பார் யூ அம்மா' எனவும், 'சோல் ஆப் வாரிசு' என்று குறிப்பிடப்பட்டுள்ள இப்பாடலை விவேக் எழுதி உள்ளார், கே.எஸ்.சித்ரா பாடியுள்ளார்.

Tags :
|