- வீடு›
- பொழுதுபோக்கு›
- தளபதி 68 படத்தின் கதை முதலில் இவருக்கு எழுதப்பட்டதா?
தளபதி 68 படத்தின் கதை முதலில் இவருக்கு எழுதப்பட்டதா?
By: vaithegi Wed, 22 Nov 2023 4:01:37 PM
தளபதி 68 கதை சிம்புவுக்கு எழுதப்பட்ட கதை ..சிம்புவை வைத்து மாநாடு என்கிற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து அவருடைய 68-வது படமான ‘தளபதி 68’ படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். படத்தில் லைலா, ஸ்னேகா, பிரசாந்த், பிரபுதேவா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இத்திரைப்படத்தின் கதை இயக்குனர் வெங்கட் பிரபு விஜய்க்காக எழுதவில்லையாம். முதன் முதலாக சிம்புவுக்கு தான் இந்த திரைப்படத்தின் கதையை எழுதினாராம். கொரோனா காலகட்டத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு தளபதி 68 படத்தின் கதையை கூறினாராம். அந்த கதைனுடைய ஒன்லைனை கூறினாராம்.
ஆனால், இது இருக்கட்டும் என்பது போல சிம்பு கூறிவிட்டாராம். அதன் பிறகு இப்படம் எடுக்கப்படவேண்டி இருந்த சூழலில் படத்திற்கான செலவுகளை தயாரிப்பாளர் செலவு செய்ய தொடங்கிவிட்டாராம். பிறகு சிம்பு ஒரு ஐடியா சொன்னாராம். அது என்னவென்றால், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு ஒரு கதை ரெடி செய்து அவருக்கு ஒரு படம் செய்து கொடுக்கலாம் என்று கூறியிருந்தாராம்.
அதன்பிறகு தான் மாநாடு படத்தின் கதையை இயக்குனர் வெங்கட் பிரபு எடுத்தாராம். சுரேஷ் காமாட்சியும் எத்தனை வருடங்கள் ஆனாலும் பரவாயில்லை கண்டிப்பாக மாநாடு படத்தை எடுத்தே ஆகவேண்டும் என கூறிவிட்டாராம். பிறகு மாநாடு படத்தையும் திட்டமிட்டபடி எடுக்கப்பட்டு படமும் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்து விட்டது.
அதன் பிறகு வெங்கட் பிரபு சிம்புவிற்காக எழுதி இருந்த அந்த கதையை என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பிறகு கதை குள் இறங்கி அதனை விஜய்க்கு ஏற்றபடி மாற்ற தொடங்கினாராம். மாற்ற தொடங்கி முழுவதுமாக விஜய்க்கு எப்படி செட் ஆகுமோ அதே அளவிற்கு முழுவதுமாக மாற்றி கதையை விஜயிடம் கூறினாராம்.