Advertisement

நாளை பாருங்கள் வேட்டையனை... ராகவா லாரன்ஸ் வெளியிட்ட புகைப்படம்

By: Nagaraj Sun, 30 July 2023 6:58:03 PM

நாளை பாருங்கள் வேட்டையனை... ராகவா லாரன்ஸ் வெளியிட்ட புகைப்படம்

சென்னை: நாளை பாருங்கள் வேட்டையனை... கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார்.

சந்திரமுகி-1 திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு பெரும் வெற்றி பெற்றதோடு மிக அதிகமான வசூலையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.

raghava lawrence,twitter page,hunter,sword in hand,standing back ,ராகவா லாரன்ஸ், ட்விட்டர் பக்கம், வேட்டையன், கையில் வாள், திரும்பி நிற்கிறார்

லைகா புரெடக்சன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கலை - தோட்டா தரணி. மேலும், கங்கனா ரணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலு ஆகியோர் டப்பிங் முடித்ததாக படக்குழு சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கையில் வாள் உடன் பின்புறம் திரும்பி நிற்கும் வேட்டையன் மகாராஜாவின் புகைப்படம் வெளியிட்டு வேட்டையன் கதாபாத்திரத்தில் இருக்கும் புகைப்படம் நாளை காலை 10 மணிக்கு வெளியாகுமென நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Tags :
|