Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நம்மை உயிரோடு வைத்துள்ள கடவுளுக்கு நன்றி சொல்லலாம்; நடிகை ரகுல் பிரீத் சிங்

நம்மை உயிரோடு வைத்துள்ள கடவுளுக்கு நன்றி சொல்லலாம்; நடிகை ரகுல் பிரீத் சிங்

By: Monisha Mon, 27 July 2020 1:06:43 PM

நம்மை உயிரோடு வைத்துள்ள கடவுளுக்கு நன்றி சொல்லலாம்; நடிகை ரகுல் பிரீத் சிங்

காலம் கற்றுக்கொடுத்துள்ள பாடத்தை கவுரவமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நடிகை ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கில் அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:-

"உலக மக்கள் அனைவரையும் கொரோனா மிகவும் கஷ்டப்படுத்தி விட்டது. இந்த 2020-ம் ஆண்டில் பாதியை கடந்து விட்டோம். இந்த வருடம் எல்லோருக்குமே பெரிய கஷ்டத்தை கொடுத்து இருக்கிறது. ஒவ்வொரு நாளையும் பயத்தில் கழிக்கிறோம். காலம் கற்றுக்கொடுத்துள்ள பாடத்தை கவுரவமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த கொரோனா கஷ்டத்தில் இருந்து எப்போது வெளியே வருவோம் என்று சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம். கூடுமானவரையில் எல்லோரும் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வோம். நமக்குள் இருக்கும் சக்தி சாமர்த்தியங்களை வைத்து கொரோனாவை எதிர்கொள்ள முயற்சி செய்யலாம்.

corona virus,difficulty,fear,thanks,actress ragul preet singh ,கொரோனா வைரஸ்,கஷ்டம்,பயம்,நன்றி,நடிகை ரகுல் பிரீத் சிங்

நம் முன்னோர்கள் இதைவிட பெரிய நோய்கள், விபத்துக்கள் யுத்தங்களையெல்லாம் சந்தித்து இருக்கிறார்கள். எல்லையில் ராணுவ வீரர்கள் தினமும் உயிரை பணயம் வைத்து போராடுகிறார்கள். அவர்களோடு ஒப்பிடும்போது நாம் பாதுகாப்பான நிலையில்தான் இருக்கிறோம். எனவே கொரோனா கஷ்டத்தில் பின்வாங்காமல் போராடலாம்.

வீட்டோடு இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள். நம்மை உயிரோடு வைத்துள்ள கடவுளுக்கு நன்றி சொல்லலாம். எதுவும் ஆகாது என்று நேர்மறையாக சிந்திப்போம்." இவ்வாறு நடிகை ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார்.

Tags :
|
|