Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஹெல்மேட் போடுங்க... அதான் பாதுகாப்பு; ரசிகர்களுக்கு ராஷ்மிகா அட்வைஸ்

ஹெல்மேட் போடுங்க... அதான் பாதுகாப்பு; ரசிகர்களுக்கு ராஷ்மிகா அட்வைஸ்

By: Nagaraj Tue, 27 Dec 2022 10:37:54 AM

ஹெல்மேட் போடுங்க... அதான் பாதுகாப்பு; ரசிகர்களுக்கு ராஷ்மிகா அட்வைஸ்

சென்னை: இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வந்த ராஷ்மிகாவை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அவரது காரை தொடர்ந்து வந்து ரசிகர்களை நோக்கி ஹெல்மெட் போடுங்க அதான் பாதுகாப்பு என்று சொல்ல, தங்களிடம் ராஷ்மிகா பேசிய மகிழ்ச்சியில் நன்றி அக்கா என்று சொல்லி உற்சாகமாயினர்.

வாரிசு பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு சென்று விட்டு வெளியே சென்ற நடிகை ராஷ்மிகாவை இரு சக்கரவாகனத்தில் ரசிகர்கள் வேகமாக பின் தொடர்ந்த நிலையில் காரை நிறுத்தி ராஷ்மிகா அறிவுரை கூறிய நிகழ்வு அரங்கேறி உள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி முடிந்து காரில் புறப்பட்ட ராஷ்மிகா மந்தனாவை சில ரசிகர்கள் இரு சக்கரவாகனத்தில் பின் தொடர்ந்தனர்.

rashmika,fans,excitement,action,audio release ,ராஷ்மிகா, ரசிகர்கள், உற்சாகம், நடவடிக்கை, ஆடியோ வெளியீடு

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சாலையை கடந்து, மருத்துவமனை சந்திப்பு சிக்னல் அருகே ராஷ்மிகாவின் கார் , ஆட்டோ ஒன்றின் அருகில் நின்ற போது, விரட்டிச்சென்ற ரசிகர்கள் , அவரை பார்க்கும் ஆவலை தெரிவிக்க, காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ராஷ்மிகாவோ, ரசிகர்களை நோக்கி ஹெல்மெட் போடுங்க அதான் பாதுகாப்பு என்று சொல்ல, தங்களிடம் ராஷ்மிகா பேசிய மகிழ்ச்சியில் நன்றி அக்கா என்று சொல்லி உற்சாகமாயினர்.

இதற்கிடையே ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ரசிகர்கள் காட்டிய உற்சாகத்தில், நேரு உள் விளையாட்டரங்கில் ஏராளமான இருக்கைகள் சேதமடைந்தன. இவற்றை கணக்கெடுத்து அந்த நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க நேரு ஸ்டேடிய நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

Tags :
|
|