Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • வரும் 27ம் தேதி பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகாவுக்கு வரவேற்பு

வரும் 27ம் தேதி பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகாவுக்கு வரவேற்பு

By: Nagaraj Wed, 16 Nov 2022 11:26:17 PM

வரும் 27ம் தேதி பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகாவுக்கு வரவேற்பு

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் ரித்திகா விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ,வரும் 27ம் தேதி வரவேற்பு நடக்கிறது என்று செல்றாங்க.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்து வருபவர் ரித்திகா. இதற்கு முன்னதாக தொகுப்பாளராகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காகவும் பிரபலமானார். அப்போது பாலாவுடன் இவரை இணைத்து கிசுகிசுக்கள் வெகு வேகமாக பரவியது.

ritika,bride,romance,marriage,serial,creative director ,ரித்திகா, மணமகள், காதல், திருமணம், சீரியல், கிரியேட்டிவ் டைரக்டர்

அப்போது வீடியோ வெளியிட்ட ரித்திகா, ஒன்றாக சேர்ந்து நடித்தாலோ அல்லது வேலை செய்தாலோ உடனே காதல் என்று சொல்லி விடுவார்களா? நான் யாரை காதலிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும் அதனால் இப்படி யாரும் பேசாதீர்கள் என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக இருக்கும் வினு என்பவரை ரித்திகா திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரைத்தான் ரித்திகா காதலித்து வந்தாராம். வரும் 27ஆம் தேதி மாலை வரவேற்பு நடக்கிறது என்று கூறப்படுகிறது.

Tags :
|
|
|