Advertisement

என்ன ஒரு தீவிரமான மற்றும் த்ரில்லான படம் இது - சிரஞ்சீவி

By: Monisha Sun, 12 June 2022 5:43:07 PM

என்ன ஒரு தீவிரமான மற்றும் த்ரில்லான படம் இது - சிரஞ்சீவி

ஜூன் 3-ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படம் வெளியானது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் கமல்ஹாசன், பகத்ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வெளியானதிலிருந்து, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று வருகிறது.

விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதையடுத்து நடிகர் கமல் ஹாசன், லோகேஷ் கனகராஜ்-க்கு விலை உயர்ந்த காரையும், உதவி இயக்குனராக பணியாற்றிய 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 பைக்கையும், சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த சூர்யாவிற்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் கைகடிகாரத்தையும் பரிசாக அளித்துள்ளார்.

kamal,chiranjeevi,vikram,lokesh kanagaraj,salman khan ,கமல், சிரஞ்சீவி, விக்ரம், லோகேஷ் கனகராஜ், சல்மான் கான்

இந்நிலையில் தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவியை அவருடைய இல்லத்தில் கமல்ஹாசன் மற்றும் விக்ரம் படக்குழு சந்தித்துள்ளனர். அவர்களுடன் இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான சல்மான் கான் உடன் இருந்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து சிரஞ்சீவி தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து சிரஞ்சீவி தனது சமூக வலைதள பக்கத்தில், எனது அன்பான பழைய நண்பரான கமல்ஹாசனை விக்ரம் பட வெற்றிக்காக என் அன்பான சல்மான்கானுடன் கொண்டாடி கௌரவிக்கிறேன். நேற்றிரவு எனது வீட்டில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விக்ரம் படக்குழு. என்ன ஒரு தீவிரமான மற்றும் த்ரில்லான படம் இது. பாராட்டுக்கள் நண்பரே என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Tags :
|
|