- வீடு›
- பொழுதுபோக்கு›
- அர்ச்சனாவின் கோபம் குறித்து சுசித்ரா கூறியது என்ன?
அர்ச்சனாவின் கோபம் குறித்து சுசித்ரா கூறியது என்ன?
By: Monisha Wed, 09 Dec 2020 5:09:08 PM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடைபெற்ற 'புதிய மனிதா' என்ற டாஸ்க்கில் அர்ச்சனா தலைமையில் ரோபோ அணியும், பாலாஜி தலைமையில் மனிதர்கள் அணியும் இடம் பெற்று உள்ளன. இதில் ரோபோ அணியினர்களிடம் இருந்து மனிதர்கள் குணங்களை மனிதர்கள் அணி வரவழைக்க வேண்டும்.
இந்த நிலையில் அர்ச்சனாவை வெறுப்பேற்றும் வகையில் அவரை சிரிக்க வைக்கவோ, கோபப்படவோ, அழ வைக்கவோ மனிதர்கள் அணியில் உள்ள பாலாஜி உள்பட அனைத்து போட்டியாளர்களும் செயல்பட்டனர்.
ஒரு கட்டத்தில் எல்லை மீறியதாகவும் அர்ச்சனாவின் தந்தை இறப்பு குறித்து பேசியதாகவும் தெரிகிறது. இதனையடுத்து டாஸ்க் முடிந்தவுடன் ஆவேசமாக தனது கருத்தை முன்வைக்கிறார் அர்ச்சனா. நான் தான் பேசினேன் என்று கூறிய நிஷாவையும் அவர் விட்டுவைக்கவில்லை.
எனது தந்தை இறப்பு கேம் அல்ல என்று அவர் ஆத்திரத்துடன் பேசியதால் அனைவரும் அதிர்ந்தனர். அர்ச்சனாவை இவ்வளவு ஆத்திரத்தில் யாரும் பார்க்காததால் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அர்ச்சனாவின் இந்த செயல் குறித்து சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுசித்ரா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது:-
அர்ச்சனாவுக்கு இதுபோல் தொந்தரவாக இருப்பது பிடிக்கவில்லை. அவருடைய தவறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவர் அனைத்திலும் 100 சதவீதத்தை கொடுக்கிறாரா? அது எப்படி தவறாகிவிடும்? என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.