Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேக வெடிப்பு என்றால் என்ன? ஆண்டுதோறும் இமயமலை பகுதியில் மேகவெடிப்பு நிகழக் காரணம் என்ன?

மேக வெடிப்பு என்றால் என்ன? ஆண்டுதோறும் இமயமலை பகுதியில் மேகவெடிப்பு நிகழக் காரணம் என்ன?

By: Monisha Sat, 09 July 2022 8:49:04 PM

மேக வெடிப்பு என்றால் என்ன? ஆண்டுதோறும் இமயமலை பகுதியில் மேகவெடிப்பு நிகழக் காரணம் என்ன?

வருடா வருடம் மழைக்காலம் வரும் நேரம் இமய மலைப்பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலை, வட கிழக்கு இந்திய பகுதிகளிலும் மேகவெடிப்பு ஏற்பட்டது என்று செய்தி கேட்டிருப்போம்.

முதலில் மழை எப்படி பொழிகிறது என்ற புரிதல் நமக்கு வேண்டும். நிலம் சூடாகும் போது நிலத்தில் இருக்கும் நீரும் சூடாகும். நீர் சூடாகும் போது விரிவடைந்து ஆவியாகும்.இதனால் அந்த இடத்தில் அழுத்தம் குறையும். எடை குறைவாக இருப்பதால் நீராவி நிலத்தை விட்டு மேலே ஏறும்.

cloud burst,rain,cause,year ,மழை, இமயம்,மேகம்,வெடிப்பு ,

உயரம் ஏற ஏற வளிமண்டலத்தின் தற்பவெப்பநிலை குறைந்துகொண்டே போகும். 15 கிமீ வரை உயரும் நீராவி குளிர்ந்து அங்கேயே மேகமாக மாறும். இப்படி சேரும் நீர்த்திவலைகள் சேர்ந்து எடை கூடும் நேரம், அந்த மேகங்களின் மேல் குளிர் காற்று வீசினால் மழையாக பொழியும்.குறைந்த நேரத்தில் இந்த செயல்கள் எல்லாம் நடந்து வீரியம் கூடி பொழிந்தால் அது மேகவெடிப்பு எனப்படும்.

சாதாரணமாக மேகம் உருவாகும் நேரத்தை விட குறைந்த நேரத்தில் மழைமேகம் உருவாகி மெதுவாக பொழியாமல் மணிக்கு 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான அளவு மழையை ஒரே இடத்தில் கொட்டித் தீர்ந்தால் அது தான் மேகவெடிப்பு.இந்த அதீத மழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு முதலியன நிகழ்கிறது.



Tags :
|
|